Tuesday 29 June 2010

கண்ணீர் காதல்


காதல் என்பதும், காமம் என்பதும் மனிதனின் இயற்கை குணங்கள். அது அவர்களின் உணர்ச்சியின் உரிமைகளே!

ஆனால் நமது கலாச்சரமும் அதிலிருந்து.. நன்மைகளை நெறிப்படுத்துவதன் நோக்கத்துடன்.. காதலுக்கும் காமத்துக்கும் சில நெறிமுறைகளை கொண்டது நமது கலாச்சாரம்.

நமது கலாச்சரம் அழிவதனை எதிர்கொள்பவர்களில் நானும் ஒருவன்.
ஒவ்வொருவரின் வாழ்கையிலும் அவர்களின் குடும்பங்களிலும் பலவித பிரச்சனைகளும் துன்பங்களும் பிரிவுகளும் தோல்விகளும் அவமாணங்களும் உருவாக காரணம்..  பிடிவாதங்களினாலும், விட்டுக்கொடுக்கும் உணர்வுகள் இல்லாமையுமே.

கண்டவுடன் காதலித்த காலம் அது அப்போ! ஆனால் காணமலே காதலிக்கும் காலம் இது இப்போ!  நல்ல இதயங்கள் காணாமல் காதலித்து கண்டுகொள்ளும் தருணம் கல்யாணத்தில் முடிவதுதான் இப்போது நமது இளைய சந்ததியினரின் புதிய பாதையாக உருவாகியுள்ளது..

இதனால் ஏமாற்றங்களும் அதிகமாகின்றன.  குடும்பத்தின் வரவு முதல் செலவு வரை, தனது ஆசைகளை மறந்து கணவனும் மனைவியும் பெண்பிள்ளைகளுக்காக ஓடி உழைத்து அவர்களை வளர்க்கின்றனர்.
ஆனால் பெற்றோரின் எதிர்கால ஆசைகளில் இவர்கள் கண்ணீரை பரிசளிக்கின்றனர். காரணம் என்ன? காதல் காமத்தை தாண்டுவதே!

பெற்றோருக்கும் விட்டுகொடுக்க மணமில்லை... காதலர்களுக்கும் காவியம்பாடும் காலங்களில் கவிதைகளாக வேண்டும்...
எனவே கண்கள் கசங்குகிறது... யாருக்கு? பெற்றோருக்கு...

(ந.ரசிகரன்)






Wednesday 23 June 2010

ஒரு மனசு..


அந்த வானமே! எனது மனதின் மயக்கம்...

மேகமே! எனது மயக்கத்தின் மருந்து...


பெய்யும் மழையே! எனது தாகத்தின் குளிர்...

நிறைந்த குளமே! எனது குளிரின் கம்பளி...


வளரும் நாத்து! எனது உயிரின் விலை..

மண் வாசணை! எனது விலையின் தயக்கம்...
                                                                                                                                  
தயங்கிய மனசு! எனது ஆசைகளின் பொக்கிஷம்..

பொக்கிஷமே!  எனது பிறவியின் பாக்கியம்...





Saturday 12 June 2010

துளி..துளியாய் காதல்




நிலவை பார்த்து வளர்ந்தவளே!

இன்று உனக்கென்ன கோபம் அந்த நிலவின் மீது...

வாணவில்லுக்கு வர்ணம் கொடுத்தவளே!

வா!  வைகறை பொழுதில் பெளர்ணமி காணலாம்...

மழையில் விளையாடி மழலை மொழி பேசியவளே!

மயக்கம் கொண்டேன்..  நீ  சூடிய மல்லிகையில்...

இன்று மல்லிகை நனைகிறது.. நீ சிந்தும் மழைத்துளியால்...

அன்பே!  தாகம் கொண்டேன்.. வந்து தண்ணீர் கொடு...

"கோபக்காரி"


அந்த சிரிப்பில்தான் சிதைந்தது மனது....
தாய் தந்த பாசம் மறந்தேன்
அவள் என்னை ஏங்க செய்ததால்...
மண்ணில் மனிதன் தனது குழந்தையாக வாழ
மின் மினி மீன்களை அரவணைத்தாள்...
அழகாகத்தான் இருந்தது
அந்தி நிமிடங்களும் அக்கரையும்..
அவள் பார்வை படும் வரை!
புன்னகை என்றிருந்ததை
பேரழிவாக்கினாள்!
எங்கள் வளம் வாழ வைத்தவள்
வாரி இறைத்து
குலம் அழித்தாள்!
உப்பு காற்று சுமந்தவனின் தேகத்தில்
உயிரின் வீச்சம்!
ரத்தபந்தத்தை வேர்கொண்ட அவள்
சிரிப்பில் எங்களை அழித்த கோபக்காரி...
இப்போது அன்பைச் செலுத்துகிறாள்..
ஒவ்வொருமுறை ஆக்குபவளும் அவளே!
ஒருமுறை அழித்தவளும் அவளே!
அன்பாகி, ஆழியாகி
எப்போதும் கடலாகிறாள்.

Sunday 6 June 2010

அவளுக்காக..


நான் இவள் மீது கொண்ட காதலை மறந்தேன்...
இன்று இவளின் கன்னம் முதன்முதலாய் சிவக்கக்கண்டு!

காதல் கொண்டேன் இவளின் பெண்மையின் பொறுமை கண்டு..
தலைகுனிந்தாள்..  தனது தாய்மையின் ஆரம்பம் கண்டு!

செவ்விதழ்கள் சிரிக்க கன்னங்கள் மிளிர்க்க..
மயக்கம் கொண்டாள் என் பார்வை கண்டு!

காதல் கொண்ட இதயங்கள் கைகோர்த்தன..
காதலாகி காவியம் பாடிய இதங்களின் ஆசீ கொண்டு!

கண்கள் பனித்தன அவளின் ஆசை முத்தம் கண்டு..
 தலை நிமிர்ந்தாள் தன் மெளனத்தில் புன்னகை கொண்டு!.


Saturday 5 June 2010

"வரையப்படாத ஓவியங்கள்"

 
   அழகான தனது தொட்டிலில் உறங்கிய இரண்டு சிட்டுக்குருவிகள்.. காலை வணக்கங்களை அழகான,  ஆசைகளுடன் அசைந்தாடிக்கொண்டு, பறிமாற்றி பறந்து சென்றன,

 அந்த பக்கத்து வீட்டு சேவல் செவ்வாணம் சிவக்கக் கண்டு இந்த வீட்டு கோழியை ’சீக்கிரமா! வா வா’ என அழைத்தது.  கடற்கரை காற்று சிலிர்க்க கடல் அலை காலைத்தென்றல் பாட, காவியா எனக்கு ”குட்மோர்னிங்” சொன்னாள். நானும் ’வணக்கம்’ என்றேன்.


காவியா- என் நன்பணின் தங்கை. நான் ரசிக்கும் கடற்கரையின் அந்திவாணம்..

நானும் நந்துவும்(காவியாவின் அண்ணன்) மாமரத்தடியில் இருந்த தண்ணீர் பைப்பில் குளித்துவிட்டு,  'வாழையிலை கேட்ட நந்து அம்மாவுக்கு  அவங்க தோட்டத்தில் வழையிலையும் வெட்டிக்கொடுத்தேன்.

  வீட்டுக்கு வந்த நந்துவின் மாமா.. 'சாப்டிங்களா' என்றார்.   காவியாவின் அப்பா ‘இரவில் நன்றாக உறங்கினியா?’ என என்னிடம் கண்ணோடு கண் பார்த்து கேட்டார்.  காலை வீட்டுக்கு வந்த அவங்க ஊர் தர்மகர்த்தா.. எனது தலையை தடவி ’உன் அம்மா,அப்பா  நலமாக இருக்காங்களா? என அன்பாக விசாரித்தார்.

நந்து வீட்டுக்கு வந்த எல்லோரும் என்னைப்பார்த்து என் கண்களைப்பார்த்து, சுகம் கேட்டார்கள்.அவங்க வீட்டுக்கு சாப்பிட அழைத்தார்கள். நீண்ட நேரம் என் சிறு வயசு குரும்புகளைக் கேட்டார்கள்.
 மாம்பழம் வெட்டி தந்தார்கள். வெயில் நேரங்களில் செவ்இளநீர்(செவ்விளணீர்) சீவித்தந்தார்கள்.  இதைப்போல் நிறைய நிறைய...

இன்னொரு காலைப்பொழுது...




அந்த இந்து சமுத்திர கரையோரத்தில் உள்ள கடற்கரை மண்ணில் இருந்து,  கிளம்ப விருப்பம் இன்றி சென்னையில் இருக்கும் என் வீட்டுக்கு கிளம்பினேன்.  இந்த ரயில் நிலையத்தில் அவசர அவசரமான காலை வணக்கங்கள் பறிமாறப்படுகின்றன. தடுமாற்றமான பயணங்கள் ஒவ்வொரு கண்களிலும்.  அவசர கைத்தொலைபேசிகள் அவசர அவசரமாக ரிங் ரிங்.. ’லூசு லூசு.’. ’போன் அடிக்குது அட போன எடு..எடு’ என்று பல பல ரிங் டியூன் என் காதை கிழித்தன. நானும் நந்துவும் வீட்டுக்கு வந்து சேருவதற்கே மணி பத்து.

காத்திருந்தாள்.கேமளா’ எங்கள் வீட்டு மொட்டமாடியில்..
(தொடரும்)

Tuesday 1 June 2010

நீயும் நானும்

காதலையும் கடவுளையும் ஒன்றாக கண்டேன் உன் உருவில்... நீ எனக்கு வரம் தர மட்டுமே படைக்கப்பட்ட கடவுள்... உன் அன்புக்கு மட்டுமே அடி பணியும் சாத்தான் நான்..