Monday, 27 December 2010

மகிழ்ச்சி




அவன் கானும் கனவுகளே அவனது மெளனம்``
அவனது ஆசைகள், என்றும் அவனுள் தயக்கம்``

இவன் கொண்ட காதல், இவனது முதல் பயணம்``
இவனது பாசம், அன்பு அம்மாவின் அர்த்தமான வளர்ப்பு``

காதல் கொண்ட உள்ளம் ஒன்று இவனுடன் கைகோர்க்க....
வீரம் கொண்டு இவனுடன் விரல்மோதியது.





அவளின் கனவுகள், அவளது ஆசைகளே``
அவளின் தயக்கமே அவள் மெளனம்``

இவள் கொண்ட காதல்,  இவன்மீது இவள் கொண்ட மகிழ்ச்சி``
இவளின் மகிழ்ச்சி,  இவர்களது குழந்தை``


இருவரின் கனவுகள்,  இவர்களது காதலும் கடிதங்களும்``
இவர்களது சிந்தனை, ஒவ்வொன்றும் ஒன்றோடு ஒன்றுதான்``



வணக்கம்

Thursday, 21 October 2010

நம்பிக்கை

குளிர்காற்று வீசுகின்ற தருணம், கருமேகங்கள் ஒன்றோடு ஒன்று உரையாடிக்கொள்ள மழை கொட்டும்வேளையில்  `சாவித்திரி வீட்டு டெலிபோன் அவசரமாக அழைத்தது.  `ஆட்டோ பாபு  பேசுகிறேன். நான் உங்க வீட்டு வாசலில் நிக்கிறேன், உங்க கணவர் அனுப்பினார்’ என்றான் பாபு. காரணம் அவளின்  கார் பழுதடைந்திருந்ததால்  அன்று அவள் ஆட்டோவுக்காக காத்திருந்தாள். ஓடி வந்து ஆட்டோவில் ஏறினாள் அந்த இளவயது பெண்குட்டி..

``கர்ப்பிணிப்பெண்களுக்கு இலவசம்`` என்ற வாசகத்தை உற்று நோக்கிய சாவித்திரி.    ’உன்னோட மனைவி இந்த ஆட்டோவில் ஏறியிருக்கிறாளா?’ என்றாள். உடனே பாபுவும், ‘ஆம் தினமும் ஒரு ரவுண்டு வருவா என்றான்.

சாவித்திரி:   ‘இதுவரை எத்தனை கர்ப்பிணிப்பெண்களை இலவசமாக பிரசவத்திற்கு அழைத்துப் போயிருக்கிறாய்?’

பாபு:   ‘இருபது பேராவது இருக்கும்’

உனக்கு எத்தன பசங்க என்று சாவித்திரி பாபுவிடம் கேற்க..  இன்னும் போராடுகிறோம் என்றான் பாபு.

அந்த பிரசவ ஆஸ்பத்திரியின் முன் ஆட்டோவை நிருத்தச் சொல்லி தன் விசிட்டிங் கார்டை அவனிடம் கொடுத்தாள்.

“நீ செய்றது பெரிய தொண்டு. உன் மனைவியின் நம்பிக்கை வீண் போகாமலிருக்க, நீயும் அவளும் ஆஸ்பத்திரியில் என்னை வந்து பாருங்க. உங்கள் மடியில் ஒரு குழந்தையைத் தவழச் செய்வது எனது பொறுப்பு”

என்றாள் பிரபல குழந்தை பிறப்பு நிபுணரான டாக்டர் சாவித்திரி.

Monday, 11 October 2010

கல்வியா?செல்வமா?வீரமா?

வீரம்,செல்வம்,கல்வி இவைகளில் எது முக்கியம்? எது பெரிது? இதுதான் நவராத்திரியின் ஆரம்பம். 


ஆனால் இந்த நூற்றாண்டில் இவைகள் மூன்றும் யாரிடம் அதிகமாக இருக்கிறதோ! அவர்கள் வெற்றியாளர்களாகிறார்கள்.  இந்த வெற்றி, தனிமனிதன் முதல் உலக நாடுகள் வரை நாம் அறிந்தது.

மனிதன் என்பவன் மட்டும் அறிவுடயவனல்ல என்பது யாவறும் அறிந்த விடயம். காரணம்  உதாரணமாக நாம் விலங்குகளைவிட ஒரு அறிவு அதிகம் கொண்டதனால் ஆறறிவு கொண்ட மனிதனாகிறோம். இந்த அறிவின் வளர்ச்சிதான் கல்வி என்பதும் எமக்கு புரியும். இதனால்தான் நானும் இந்த கட்டுரையினை எழுதுகிறேன். ஆகவே கல்விதான் பெரியதா?  இல்ல தற்போதய உலகில் செல்வம் வேண்டுமா?

பூமியில் பிறக்கும் ஒவ்வொருவரின் அவசியங்கள் அவர்களின் குடும்ப பொருளாதாரம்தான் முடிவு செய்கிறது. தற்போதய உலகில் உண்ண உணவு முதல் அவர்களின் கல்வி வரைக்கும் செல்வம் அவசியம்.

வீரம் கொண்ட கடவுள் `தைரியலட்சுமி` ஆகவே தைரியம் கொண்ட சக்தியைத்தான் நவராத்திரியில் முதலாக வணங்குகிறோம். காரணம். தைரியம் என்பது மனிதனின் உடல் ஆரோக்கியம் முதல் உலக போர்வரையும் பொருந்தும். மனிதனின் உடல் ஆரோக்கியம் பிறவியின் ஆரம்பம் முதல் உருவானது. ஆனால் தற்போதய உலகில் தைரியம் வளர்க்க `செல்வம்` வேண்டும்.

ஆதிகாலம் முதல் தற்போதய உலகம்வரை போராட்டங்களும் வீரதீர செயல்களும் நாடுகளுக்கிடையேயான அசுரதீர செயலின் பாதிப்புகளும்,  ஈழத்தின் தற்போது நடந்த மனித பேரழிவுகளும் உண்டாக காரணம் என்ன?
செல்வம் தேடும் போட்டிதான். 

அறிவு பிறவியிலானது அதன் வளர்ச்சி கல்வியாகும்.
தைரியத்தின் ஆரோக்கியம் வீரம்.
அறிவு-செல்வம்-கல்வி,   தைரியம்-செல்வம்-வீரம் ஆனால்

வீரம்-செல்வம்-கல்வி  இதுதான் உண்மை. செல்வமே நடுநிலைமையான அவசியம்.

Wednesday, 15 September 2010

இலங்கையில் ஒரு இராமேஸ்வரம்

இலங்கையில் இந்துசமுத்திர கரையோரத்தின் மேற்கு திசையில் அழகான வரலாற்று பொழிவுடன் அமைந்திருக்கிறது இந்த..  உடப்பு என்று அழைக்கப்படும் `உடைப்பு` கிராமம்.
வாணம் பொழிவது.. நல்ல விடயம்தான். ஆனால் இந்த கிராமத்தை சுற்றி அமைந்திருக்கும் ஏனைய ஊர்களுக்கு மழை பெய்தாலே! ஆபத்தாக இருந்திருக்கிறது.
இதனால் கடலோரமாக இருக்கும் உடப்பு` கிராமத்தின் வழியாக அன்றிலிருந்து இன்றுவரை வெள்ளத்தினை கடலுக்கு சேர்ப்பதனால் `உடைப்பு` என உருவெடுத்து,  ’உடைப்பங்கரை’  என்றும் தற்பொழுது `உடப்பு` எனவும்,  இலங்கை அரச மொழியினால் `உடப்புவ` எனவும் அழைக்கப்படுகிறது.

உடப்பு 2012இல் பிரதேச சபையாக மாற்றமடையும் என்பது இக்கிராம வாழ் மக்களின் கருத்து ஆகும். இக்கிராமத்தில் அமைந்திருக்கும் ஆலயங்களின் ஆசீர்வாதம் பெற்றும்.. கடலின் காதல் கொண்ட காற்றலை சத்தத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
இதேவேளை சிங்களத்தின் புறக்கனிப்பினால் இராணுவ தொந்தரவுகளுடன் அராசாங்க போக்குவரத்து வசதிகள் இல்லாமலும் வாழ்கிறார்கள்.

உடப்பு மற்றும் ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயங்கள் புத்தள மாவட்டத்தின் கீழ் அமையப்பெற்றவை.  இவ்விரு பாடசாலைகளின் மொத்த மாணவர்கள்தொகை கிட்டத்தட்ட 3700. இந்த இரு பாடசாலைகளும் அந்த மாவட்டத்தின் விளையாட்டுப்போட்டிகளிலும் என்றுமே முன்னிலைதான். இந்த பாடசாலைகளின் பழைய மாணவர்கள் நாட்டின் சூழ்நிலையாலும் வேலைவாய்ப்பு புறக்கனிப்பினாலும் பாதுகாப்பின்றிய காரணங்களினாலும் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

(வீரபத்திரகாளி அம்மன் கோவில் சுவரின் வரலாற்று சித்திரம்.)
ஆலய திருவிழா முதல் கல்யாணம், கலாசாரம்,பேச்சுத்தமிழ் அனைத்தும் இராமேஸ்வரத்தின் அச்சுக்கலவை என்றே கூறலாம். காரணம் அவர்கள் இராமேஸ்வரத்தின் வேர்கள்.



இராமேஸ்வரத்திலிருந்து  18மீனவ குடும்பங்கள் 7தோனியில்(மீன்பிடிபடகு) 1630 இல் அதாவது 16ஆம் நூற்றண்டில் கடல்வழியாக இலங்கைக்கு வந்துள்ளார்கள்.  அன்றிலிருந்து இன்றுவரை உடப்பு கிராமத்தின் பாரம்பரிய தொழில் மீன் பிடிப்பு. அதிக முதலீடாக இறால் வளர்ப்பு முறையும் இவர்களால் கையாளப்படுகிறது.  தற்போது இம்மக்களின் சனத்தொகை 16000வரை வளர்ந்துள்ளது.

மேலும் சிறப்பானதொரு விஷயம்  இராமேசுவரத்தின் ’சிவன்கோவிலுக்கும்  உடப்பின் ‘ஸ்ரீ ருக்மனி சத்யபாம சமேத ஸ்ரீ பார்த்தசாரதி, திரெளபதை அம்மன் தேவஸ்தானத்துக்கும் உறவு உள்ளது.
(18நாள் ஆடிதிருவிழாவின் தீமிதிப்பு)

(பாடசாலை மாணவிகள்)

 கொழும்பிலிருந்து 150கிலோமீட்டர் தூரமும் புத்தளமாவட்டம் மற்றும் சிலாப நகரசபைக்குள் இருப்பதும், தென்னந்தோப்புக்களும், இந்துசமுத்திர கடற்கரையும்  மற்றொருபுறம்  ஒல்லாந்தர்(டச்சுக்காரர்) வெட்டிய வாய்க்காலும் இந்த கிராமத்தின் அடையாளங்கள். 

’நாம் தமிழர்’ இயக்க சீமான் அவர்கள் இந்த கிராமத்தின்  பாசத்துக்குரியவரும் ஆவார்.

நாட்டியம் நாடகம் சினிமாவரைக்கும் இவர்கள் தமிழ்நாட்டுக்காரர்களாகவே  வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.


ஈழத்தமிழன் உணர்வுகளையும் இந்திய தமிழ்    வார்த்தைகளையும் இவர்கள் சுமந்து வாழ்கின்றனர்.

மகாபாரத கதை(ஆடிமாதம்) 18நாட்கள் திருவிழாவாக இந்தகிராமத்தில் கொண்டாடப்படுகிறது.

  


சித்திரையில் முளக்கொட்டுதல்(முளப்பாரி வளர்த்தல்) திருவிழா உடப்பு பெண்களால் மிகவும் ஆடம்பரமாகவும் நேர்த்தியாகவும் கொண்டாடப்படுகிறது.

இப்படி அறிந்த பல சிறப்புக்களையும் அறியாத இன்னும் பல சிறப்புகளையும் கொண்டு நூறுசதவீத தமிழ் கலாச்சார கிராமமாக, தமிழ்நாட்டைப்போல விளங்குகிறது இலங்கையின் உடப்பு கிராமம்.


















மேற்கண்ட படத்தில் இருக்கும் பேராசிரியர் `திரு.வ.சிவலோகதாசன்` என்பவர்தான் முதன் முதலில் 1997-ஆம் ஆண்டு உடப்பு-வின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் குறித்தும் புத்தகம் வெளியிட்டார்.

     நன்றி!.....         
                                                                                                                                                          

Wednesday, 7 July 2010

வந்து பாருங்க

நயந்தாரா நமது கண்களுக்கு... புதிய உலகம் நமது சிந்தனைக்கு... க்ளிக் செய்யுங்க The Technology News ok
Technology News

`ஸ்ரீ சுவாமி நாராயணன்`

இங்கிலாந்தில் இந்து சமயமும் அதன் கலாச்சாரமும் என்னும் கூர்மையான நோக்கத்துடனும்,  ஜரோப்பாவில் முதலில் வடிவமைத்த அழகானதும் அற்புதமானதுமான இந்து கோவில் இதுவென சொல்லலாம்.

லண்டனில் வடமேற்கு பகுதியான வெம்லியில்’(wembly)   வெள்ளைநிற மார்பிள் கோவில் என்று கேட்டாலே! அது Neasden `ஸ்ரீ சுவாமி நாரயணன் மந்திர்` ஆலயமே.  அமைதியான சுற்றுச்சூழலும் இக்கோயிலின் முக்கிய சிறப்பாகும்.

இந்து கலாச்சாரம் மீது ஆர்வம் கொண்ட இந்துக்கள் மட்டுமன்றி இங்கிலாந்து பிரதமர் முதல் உலக தலைவர்களும் அடிக்கடி வந்துபோகும் பெருமையும் இந்த கோவில் நிர்வாகத்துக்கும் பெருமை. இங்கு வந்து போகும் பிரபல்யங்களின் புகப்படங்கள் பார்வைக்கும் வைக்கப்பட்டிருக்கிறது.  கோவிலின் விழா, சர்வதேச  மகளீர்தினம், EXHIBITION, BLOOD DONATION  ஆகிய நிகழ்வுகளுக்கு இங்கிலாந்து பிரபல்யங்கள் கொளரவ விருந்தினர்களாக அழைக்கப்பட்டு வரவேற்கப்படுகிறார்கள்.  `அப்துல் கலாம், `டோனிஃப்லயர், டேவிட் கெமரூன், கோர்டன் ஃப்ரவுன் மற்றும் மறைந்த இளவரசி `டயானாவும் ப்ரின்ஸ் சார்லஸும் இக்கோவிலுக்கு வருகைதந்துள்ளனர்.   



1992ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு மூன்று வருடங்களில் இக்கோவில் உருவாக்கப்பட்டது. 2820டன்கள் எடைகொண்ட பல்கேரியன் சுண்ணம்பு கற்களும் 2000டன்கள் எடைகொண்ட இத்தாலியன் மார்பிளும் இந்தியாவுக்கு எடுத்துச்சென்று 1500 சிற்பிகளின் திறமையான கைவடிவத்தில் 26300 சிற்பச்சிலைகளை வடிவமைத்து,  லண்டனுக்கு கப்பலில் கொண்டுவரப்பட்டு 3000 கட்டடகலை கலைஞர்களின் கைவண்ணத்தில் ஆகஸ்ட்மாதம் 1995 ’ஸ்ரீ சுவாமி நாரயணன் மந்திர் ஆலயம்’ அழகான வெள்ளைமாளிகை வடிவத்தில் கம்பீரமாக அமையப்பெற்றது.

இக்கோயிலின் உச்சியைப் பார்த்தாலே வானத்தில் இருக்கும் உணர்வு ஒவ்வொரு மனதையும் நிறைத்துவிடும். இக்கோவிலுக்கு வருபவர்களுக்கென வாகணம் நிறுத்தும் வசதிகளும் இருக்கிறது.  பாதுகாப்பு சோதனையின் பின்புதான் உள்ளே நுளைய முடியும். கேமராவினை உள்ளே எடுத்துச்செல்ல முடியாது.  கோயிலின் வெளிச்சூழலில் மட்டுமே புகைப்படம் எடுக்க முடியும். இக்கோவிலுக்கு வெளியில் எவ்வேளையிலும் நான்கு காவளாலாளிகளும் இருப்பார்கள்.

சிந்துசமவெளி நாகரீகம் தொடங்கி இன்றுவரை இந்துசமயம் வளர்ந்த விதத்தை ஓவியங்கள், சிற்பங்கள், பொம்மைகள் மூலமாக ஆங்கிலத்தில் கதைத்தொடர்களாக வெளிப்படுதியிருக்கிறார்கள். இதையொட்டி இராமாயனம், மகாபாரதம், சிராவணன் கதை, ரந்திதேவன் கதையும் உருவமைத்து வைக்கப்பட்டுள்ளன.  இவைகளைப் பார்த்து படித்து கோவிலின் உற்புறத்தை சுற்றி வரவே நேரங்கள் அமைதியை தழுவி கோவிலும் அமைதியாக இருக்கும்.



 வட இந்திய செல்வந்தர்களின் வாரிசுகள் மட்டுமே இந்த பாடசாலையில் படிக்கிறார்கள். ஏனெனில் ADMISSION வாங்கவே இங்கு போட்டி போடுகிறார்கள். 1992ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்பாடச்சாலையே முதலாக உருப்பெற்றிருக்கிறது. கடந்த எட்டு வருடங்களாக இப்பாடசாலைதான் லீக் டேபிலில் முதல் இடம்.  வெஸ்டன் ஸ்டைலில் உருவான இந்து பாடசாலை என்ற பெருமையும் உண்டு. இதை உருவாக்கியவர் `பிரமுக் சுவாமி மகராஜ்`

`ஸ்ரீ சுவாமி நாராயணன் கோவிலுக்குப் போங்க என்னைவிட அதிகமாக தெறிஞ்சிக்குவீங்க....
நன்றி
















Thursday, 1 July 2010

நான்! நீ!

             

நான் பார்த்த..  வளர்பிறை நீ!
நீ வரைந்த..      பெளர்ணமி நான்!

நான் வரைந்த..   சித்திரம் நீ!
நீ பார்த்த..              பனிக்கட்டி நான்!

நான்  ரசிக்கும்..  வானவில் நீ!
நீ சுவைக்கும்..   சாத்துக்குடி நான்!

நான் சுவைக்கும்..  சர்க்கரை நீ!
நீ ரசிக்கும்..                ராட்சசன் நான்!

நான் கானும்..  கனவுகள் நீ!
நீ தேடும்..           மாங்கனி நான்!

நான் தேடும்..   வைகரை நீ!
நீ கானும்..          கடற்கரை நான்!

நான் பேசும்..  மெளனங்கள் நீ!
நீ கொஞ்சும்..   மழைத்துளி நான்!

நான் கொஞ்சும்..  குழந்தை நீ!
நீ பேசும்..      மழலைமொழி நான்!

Tuesday, 29 June 2010

கண்ணீர் காதல்


காதல் என்பதும், காமம் என்பதும் மனிதனின் இயற்கை குணங்கள். அது அவர்களின் உணர்ச்சியின் உரிமைகளே!

ஆனால் நமது கலாச்சரமும் அதிலிருந்து.. நன்மைகளை நெறிப்படுத்துவதன் நோக்கத்துடன்.. காதலுக்கும் காமத்துக்கும் சில நெறிமுறைகளை கொண்டது நமது கலாச்சாரம்.

நமது கலாச்சரம் அழிவதனை எதிர்கொள்பவர்களில் நானும் ஒருவன்.
ஒவ்வொருவரின் வாழ்கையிலும் அவர்களின் குடும்பங்களிலும் பலவித பிரச்சனைகளும் துன்பங்களும் பிரிவுகளும் தோல்விகளும் அவமாணங்களும் உருவாக காரணம்..  பிடிவாதங்களினாலும், விட்டுக்கொடுக்கும் உணர்வுகள் இல்லாமையுமே.

கண்டவுடன் காதலித்த காலம் அது அப்போ! ஆனால் காணமலே காதலிக்கும் காலம் இது இப்போ!  நல்ல இதயங்கள் காணாமல் காதலித்து கண்டுகொள்ளும் தருணம் கல்யாணத்தில் முடிவதுதான் இப்போது நமது இளைய சந்ததியினரின் புதிய பாதையாக உருவாகியுள்ளது..

இதனால் ஏமாற்றங்களும் அதிகமாகின்றன.  குடும்பத்தின் வரவு முதல் செலவு வரை, தனது ஆசைகளை மறந்து கணவனும் மனைவியும் பெண்பிள்ளைகளுக்காக ஓடி உழைத்து அவர்களை வளர்க்கின்றனர்.
ஆனால் பெற்றோரின் எதிர்கால ஆசைகளில் இவர்கள் கண்ணீரை பரிசளிக்கின்றனர். காரணம் என்ன? காதல் காமத்தை தாண்டுவதே!

பெற்றோருக்கும் விட்டுகொடுக்க மணமில்லை... காதலர்களுக்கும் காவியம்பாடும் காலங்களில் கவிதைகளாக வேண்டும்...
எனவே கண்கள் கசங்குகிறது... யாருக்கு? பெற்றோருக்கு...

(ந.ரசிகரன்)






Wednesday, 23 June 2010

ஒரு மனசு..


அந்த வானமே! எனது மனதின் மயக்கம்...

மேகமே! எனது மயக்கத்தின் மருந்து...


பெய்யும் மழையே! எனது தாகத்தின் குளிர்...

நிறைந்த குளமே! எனது குளிரின் கம்பளி...


வளரும் நாத்து! எனது உயிரின் விலை..

மண் வாசணை! எனது விலையின் தயக்கம்...
                                                                                                                                  
தயங்கிய மனசு! எனது ஆசைகளின் பொக்கிஷம்..

பொக்கிஷமே!  எனது பிறவியின் பாக்கியம்...





Saturday, 12 June 2010

துளி..துளியாய் காதல்




நிலவை பார்த்து வளர்ந்தவளே!

இன்று உனக்கென்ன கோபம் அந்த நிலவின் மீது...

வாணவில்லுக்கு வர்ணம் கொடுத்தவளே!

வா!  வைகறை பொழுதில் பெளர்ணமி காணலாம்...

மழையில் விளையாடி மழலை மொழி பேசியவளே!

மயக்கம் கொண்டேன்..  நீ  சூடிய மல்லிகையில்...

இன்று மல்லிகை நனைகிறது.. நீ சிந்தும் மழைத்துளியால்...

அன்பே!  தாகம் கொண்டேன்.. வந்து தண்ணீர் கொடு...

"கோபக்காரி"


அந்த சிரிப்பில்தான் சிதைந்தது மனது....
தாய் தந்த பாசம் மறந்தேன்
அவள் என்னை ஏங்க செய்ததால்...
மண்ணில் மனிதன் தனது குழந்தையாக வாழ
மின் மினி மீன்களை அரவணைத்தாள்...
அழகாகத்தான் இருந்தது
அந்தி நிமிடங்களும் அக்கரையும்..
அவள் பார்வை படும் வரை!
புன்னகை என்றிருந்ததை
பேரழிவாக்கினாள்!
எங்கள் வளம் வாழ வைத்தவள்
வாரி இறைத்து
குலம் அழித்தாள்!
உப்பு காற்று சுமந்தவனின் தேகத்தில்
உயிரின் வீச்சம்!
ரத்தபந்தத்தை வேர்கொண்ட அவள்
சிரிப்பில் எங்களை அழித்த கோபக்காரி...
இப்போது அன்பைச் செலுத்துகிறாள்..
ஒவ்வொருமுறை ஆக்குபவளும் அவளே!
ஒருமுறை அழித்தவளும் அவளே!
அன்பாகி, ஆழியாகி
எப்போதும் கடலாகிறாள்.

Sunday, 6 June 2010

அவளுக்காக..


நான் இவள் மீது கொண்ட காதலை மறந்தேன்...
இன்று இவளின் கன்னம் முதன்முதலாய் சிவக்கக்கண்டு!

காதல் கொண்டேன் இவளின் பெண்மையின் பொறுமை கண்டு..
தலைகுனிந்தாள்..  தனது தாய்மையின் ஆரம்பம் கண்டு!

செவ்விதழ்கள் சிரிக்க கன்னங்கள் மிளிர்க்க..
மயக்கம் கொண்டாள் என் பார்வை கண்டு!

காதல் கொண்ட இதயங்கள் கைகோர்த்தன..
காதலாகி காவியம் பாடிய இதங்களின் ஆசீ கொண்டு!

கண்கள் பனித்தன அவளின் ஆசை முத்தம் கண்டு..
 தலை நிமிர்ந்தாள் தன் மெளனத்தில் புன்னகை கொண்டு!.


Saturday, 5 June 2010

"வரையப்படாத ஓவியங்கள்"

 
   அழகான தனது தொட்டிலில் உறங்கிய இரண்டு சிட்டுக்குருவிகள்.. காலை வணக்கங்களை அழகான,  ஆசைகளுடன் அசைந்தாடிக்கொண்டு, பறிமாற்றி பறந்து சென்றன,

 அந்த பக்கத்து வீட்டு சேவல் செவ்வாணம் சிவக்கக் கண்டு இந்த வீட்டு கோழியை ’சீக்கிரமா! வா வா’ என அழைத்தது.  கடற்கரை காற்று சிலிர்க்க கடல் அலை காலைத்தென்றல் பாட, காவியா எனக்கு ”குட்மோர்னிங்” சொன்னாள். நானும் ’வணக்கம்’ என்றேன்.


காவியா- என் நன்பணின் தங்கை. நான் ரசிக்கும் கடற்கரையின் அந்திவாணம்..

நானும் நந்துவும்(காவியாவின் அண்ணன்) மாமரத்தடியில் இருந்த தண்ணீர் பைப்பில் குளித்துவிட்டு,  'வாழையிலை கேட்ட நந்து அம்மாவுக்கு  அவங்க தோட்டத்தில் வழையிலையும் வெட்டிக்கொடுத்தேன்.

  வீட்டுக்கு வந்த நந்துவின் மாமா.. 'சாப்டிங்களா' என்றார்.   காவியாவின் அப்பா ‘இரவில் நன்றாக உறங்கினியா?’ என என்னிடம் கண்ணோடு கண் பார்த்து கேட்டார்.  காலை வீட்டுக்கு வந்த அவங்க ஊர் தர்மகர்த்தா.. எனது தலையை தடவி ’உன் அம்மா,அப்பா  நலமாக இருக்காங்களா? என அன்பாக விசாரித்தார்.

நந்து வீட்டுக்கு வந்த எல்லோரும் என்னைப்பார்த்து என் கண்களைப்பார்த்து, சுகம் கேட்டார்கள்.அவங்க வீட்டுக்கு சாப்பிட அழைத்தார்கள். நீண்ட நேரம் என் சிறு வயசு குரும்புகளைக் கேட்டார்கள்.
 மாம்பழம் வெட்டி தந்தார்கள். வெயில் நேரங்களில் செவ்இளநீர்(செவ்விளணீர்) சீவித்தந்தார்கள்.  இதைப்போல் நிறைய நிறைய...

இன்னொரு காலைப்பொழுது...




அந்த இந்து சமுத்திர கரையோரத்தில் உள்ள கடற்கரை மண்ணில் இருந்து,  கிளம்ப விருப்பம் இன்றி சென்னையில் இருக்கும் என் வீட்டுக்கு கிளம்பினேன்.  இந்த ரயில் நிலையத்தில் அவசர அவசரமான காலை வணக்கங்கள் பறிமாறப்படுகின்றன. தடுமாற்றமான பயணங்கள் ஒவ்வொரு கண்களிலும்.  அவசர கைத்தொலைபேசிகள் அவசர அவசரமாக ரிங் ரிங்.. ’லூசு லூசு.’. ’போன் அடிக்குது அட போன எடு..எடு’ என்று பல பல ரிங் டியூன் என் காதை கிழித்தன. நானும் நந்துவும் வீட்டுக்கு வந்து சேருவதற்கே மணி பத்து.

காத்திருந்தாள்.கேமளா’ எங்கள் வீட்டு மொட்டமாடியில்..
(தொடரும்)