அந்த சிரிப்பில்தான் சிதைந்தது மனது....
தாய் தந்த பாசம் மறந்தேன்
அவள் என்னை ஏங்க செய்ததால்...
மண்ணில் மனிதன் தனது குழந்தையாக வாழ
மின் மினி மீன்களை அரவணைத்தாள்...
அழகாகத்தான் இருந்தது
அந்தி நிமிடங்களும் அக்கரையும்..
அவள் பார்வை படும் வரை!
புன்னகை என்றிருந்ததை
பேரழிவாக்கினாள்!
எங்கள் வளம் வாழ வைத்தவள்
வாரி இறைத்து
குலம் அழித்தாள்!
உப்பு காற்று சுமந்தவனின் தேகத்தில்
உயிரின் வீச்சம்!
ரத்தபந்தத்தை வேர்கொண்ட அவள்
சிரிப்பில் எங்களை அழித்த கோபக்காரி...
இப்போது அன்பைச் செலுத்துகிறாள்..
ஒவ்வொருமுறை ஆக்குபவளும் அவளே!
ஒருமுறை அழித்தவளும் அவளே!
அன்பாகி, ஆழியாகி
எப்போதும் கடலாகிறாள்.