வீரம்,செல்வம்,கல்வி இவைகளில் எது முக்கியம்? எது பெரிது? இதுதான் நவராத்திரியின் ஆரம்பம்.
ஆனால் இந்த நூற்றாண்டில் இவைகள் மூன்றும் யாரிடம் அதிகமாக இருக்கிறதோ! அவர்கள் வெற்றியாளர்களாகிறார்கள். இந்த வெற்றி, தனிமனிதன் முதல் உலக நாடுகள் வரை நாம் அறிந்தது.
மனிதன் என்பவன் மட்டும் அறிவுடயவனல்ல என்பது யாவறும் அறிந்த விடயம். காரணம் உதாரணமாக நாம் விலங்குகளைவிட ஒரு அறிவு அதிகம் கொண்டதனால் ஆறறிவு கொண்ட மனிதனாகிறோம். இந்த அறிவின் வளர்ச்சிதான் கல்வி என்பதும் எமக்கு புரியும். இதனால்தான் நானும் இந்த கட்டுரையினை எழுதுகிறேன். ஆகவே கல்விதான் பெரியதா? இல்ல தற்போதய உலகில் செல்வம் வேண்டுமா?
பூமியில் பிறக்கும் ஒவ்வொருவரின் அவசியங்கள் அவர்களின் குடும்ப பொருளாதாரம்தான் முடிவு செய்கிறது. தற்போதய உலகில் உண்ண உணவு முதல் அவர்களின் கல்வி வரைக்கும் செல்வம் அவசியம்.
வீரம் கொண்ட கடவுள் `தைரியலட்சுமி` ஆகவே தைரியம் கொண்ட சக்தியைத்தான் நவராத்திரியில் முதலாக வணங்குகிறோம். காரணம். தைரியம் என்பது மனிதனின் உடல் ஆரோக்கியம் முதல் உலக போர்வரையும் பொருந்தும். மனிதனின் உடல் ஆரோக்கியம் பிறவியின் ஆரம்பம் முதல் உருவானது. ஆனால் தற்போதய உலகில் தைரியம் வளர்க்க `செல்வம்` வேண்டும்.
ஆதிகாலம் முதல் தற்போதய உலகம்வரை போராட்டங்களும் வீரதீர செயல்களும் நாடுகளுக்கிடையேயான அசுரதீர செயலின் பாதிப்புகளும், ஈழத்தின் தற்போது நடந்த மனித பேரழிவுகளும் உண்டாக காரணம் என்ன?
செல்வம் தேடும் போட்டிதான்.
அறிவு பிறவியிலானது அதன் வளர்ச்சி கல்வியாகும்.
தைரியத்தின் ஆரோக்கியம் வீரம்.
அறிவு-செல்வம்-கல்வி, தைரியம்-செல்வம்-வீரம் ஆனால்
வீரம்-செல்வம்-கல்வி இதுதான் உண்மை. செல்வமே நடுநிலைமையான அவசியம்.