நான் பார்த்த.. வளர்பிறை நீ!
நீ வரைந்த.. பெளர்ணமி நான்!
நான் வரைந்த.. சித்திரம் நீ!
நீ பார்த்த.. பனிக்கட்டி நான்!
நான் ரசிக்கும்.. வானவில் நீ!
நீ சுவைக்கும்.. சாத்துக்குடி நான்!
நான் சுவைக்கும்.. சர்க்கரை நீ!
நீ ரசிக்கும்.. ராட்சசன் நான்!
நான் கானும்.. கனவுகள் நீ!
நீ தேடும்.. மாங்கனி நான்!
நான் தேடும்.. வைகரை நீ!
நீ கானும்.. கடற்கரை நான்!
நான் பேசும்.. மெளனங்கள் நீ!
நீ கொஞ்சும்.. மழைத்துளி நான்!
நான் கொஞ்சும்.. குழந்தை நீ!
நீ பேசும்.. மழலைமொழி நான்!