Friday, 1 June 2012

வள்ளுவநெறி

பொய்யாமொழி  ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையானது என்று கணிக்கப்படுகிறது.  அக்காலத்தில் வெண்பாக்களால் ஆகிய முதல் நூலும், ஒரே நூலும் இதுதான். இதை எழுதிய திருவள்ளுவர் பிறந்த ஊர் `சென்னை மயிலாப்பூராகும்.

திருக்குறள் `உலகப் புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும்`. இது  இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க் கண்க்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் ஒன்றாகும்.

உத்தரவேதம் முதன் முதலில் அச்சுக்கு வந்த ஆண்டு 1812 ஆகும். இது முதன் முதலில் லத்தீன் மொழியில்தான் மொழிபெயர்க்கப்பட்டது.

                                                           
''செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
       அவியினும் வாழினும் என்`` (There is no use, if the persons who do not possess 'listening skills' Whether they live or die)

வாயுறைவாழ்த்து 133அதிகாரங்களும், 1330குறள்களும், 14000சொற்களும், 42192 எழுத்துக்களும் கொண்டது. ஆனால் ஓர் இடத்தில் கூட தழிழ் என்ற வார்த்தையை  திருவள்ளுவர் பயன்படுத்தவில்லை.

அறத்துப்பாலில் 38அதிகாரங்களும், பொருட்பாலில் 70அதிகாரங்களும், இன்பத்துப்பாலில் 25 அதிகாரங்களும் உள்ளன. குறிப்பறிதல் என்ற அதிகாரம் மட்டும் இருமுறை வந்துள்ளது.

அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் மூன்றாம் இடத்தை திருக்குறல் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  நரிக்குறவர் பேசும் `வக்ர போலி` என்ற மொழியிலும் கூட ஆகும்.

தெய்வநூலில், தமிழ் எழுத்துகள் 247இல் 37 எழுத்துக்கள் மட்டுமே இடம் பெறவில்லை. இதில் பயன்படுத்தப்படாத ஒரே  உயிர் எழுத்து `ஒள` என்பதாகும்.
                                                                      `வள்ளுவர்`
திருக்குறளில் இடம்பெற்றுள்ள  இரு மலர்கள் அனிச்சமலர், குவளை மலராகும்.  இரு மரங்கள் பனை, மூங்கிலாகும். இதில் இடம்பெற்றுள்ள ஒரே பழம், நெருஞ்சிப்பழம். ஒரே விதை குன்றிமணியாகும்.

திருக்குறள், உத்தரவேதம், பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, தெய்வநூல், பொதுமறை, முப்பால், தமிழ்மறை, திருவள்ளுவம் என வேறு பெயர்களாலும் போற்றப்படுகிறது.