Friday, 25 May 2012

வானம்பாடிகள்

அன்பான அம்மா இருந்தும் அது என்னவோ அவனுக்கு தனிமை எனும் உணர்வு...  காரணம் ஆண்மகனின் ஆசைகளைப்போல அவனுக்குள்ளும் ஒரு அடங்காத ஆசைகளின் எதிர்பார்ப்புகள்தான் அன்று அவனுக்குள்ளும்.

தாய் தருகின்ற அன்பான முத்தங்களும் தாயின் தோழமையும் அவளுக்கு வாழ்வில் வசந்தங்களாய் அவளை சுற்றிவர, அவளுக்குள்ளும் ஏதோ ஒரு தவிப்பும் தனிமையும் அவளை படர்ந்தன...

இவ்விரு இதயங்களும் சிறுவயதிலிருந்தே தன் குடும்ப சுமையை சுமந்துகொண்டு தங்களையும் வளர்த்துக்கொண்டனர்.
அவள் என்பவள் - அத்திகா
அவன் என்பவன் - க்ரிஷ்



அன்றொரு நாள் ரிங்.. ரிங் அத்திகாவின் மொபைல்போன்..
ஹலோ ஹலோ.. என்றாள்..
மறுமுனை ஹாய்.. ஹாய் சங்கீதம் மெல்ல மெல்ல அத்திகாவின் காதுகளில்...
அவ்ன்.. க்ரிஷ் பேசுகிறேன் என மெல்ல.. மென்மையான குரலில் சொல்ல,
அவளும் ஹாய்` க்ரிஷ்.. குட்மோர்னிங்.. என்றாள்,

இருவரும் இதுநாள்வரையில் ஒருவரை ஒருவர் சந்தித்தது கிடையாது.
நன்பர்களின் அறிமுகத்தால் உருவான நட்பே! இருவருக்குள்ளும், அதுவும்
இந்த மொபைலின் உதவியுடன்.

நன்பர்களான இருவரும் தனிமைகொள்ளும் நேரங்களில் தயக்கமின்றிய வார்த்தைகளால் மொபைலில் உலா வந்தனர். உலா விழா ஆனது..
`காதல் கனியத் தொடங்கியது.. கண்ணங்கள் சிவப்பதனை கண்கள் அறியாது காதலில் மிதக்க.. அவனும் அவளும் அன்புக்கு அடிமைகளாகினர்.

இந்த இரு அன்பின் அடிமைகளும்.. ஆசைகளுக்கு ஏங்க ஆரம்பித்தன. அவனும் அவளை` கண்டுகொள்ள ஆசைகொண்டான்.  அத்திகாவும் காத்திருந்த காலம் போதும்! உண்ணை கண்டுகொள்ள ஆவல்.. என்றாள்.

`மெய் மறந்த காதல் பொய்யாகலாம்`
 `பொய் மறந்த காதல் மெய்யாகுமே`
                                                                                                                                                                                                              `அக்கரைச்சீமையில் நீ இருந்தும்..   இவன்
 மனசு அடிக்கடி துடிக்குதடி`

`க்ரிஷ்`  தாகத்துடன் தனது ட்ரவலிங் பேஃக்கினை எடுத்துக்கொண்டு..