Tuesday, 27 November 2012

`திருக்கார்த்திகை தீபம்`

 
 
விளக்கு வழிபாடு இன்று நேற்று தோன்றியதல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்மக்கள் இறைவனை ஜோதியாக வணங்கிப் போற்றியுள்ளனர்.
 
 சங்ககால இலக்கியங்கள் இவ்வழிபாட்டை "கார்த்திகை விளக்கீடு' என்று குறிப்பிடுகின்றன. பெண்கள் விளக்கு வழிபாடு செய்த நிகழ்வு அகநானூறு, நற்றிணை ஆகிய எட்டுத்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கிய ஆய்வாளர்கள், கார்த்திகை மாதத்தையே முதல் மாதமாகக் கொண்டு தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்டதாக கருதுகின்றனர். மாதம் தோறும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும், கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை நட்சத்திரமே "பெரிய கார்த்திகை' எனப் போற்றப்படுகிறது. அருட்பெருஞ்ஜோதியாகிய சிவன், தனிப்பெருங்கருணையோடு நமக்கு அருள் புரியும் நாள் திருக்கார்த்திகை.
 

இறைவனுக்கு நைவேத்யம் செய்யாவிட்டால் வழிபாடு நிறைவு பெறுவதில்லை. கார்த்திகைக்குரிய பிரசாதமாக கார்த்திகைப் பொரியை இறைவனுக்கு படைப்பது மரபு. வெல்லம் சேர்த்த பொரி உருண்டையோடு, அப்பம், பாயாசம், பிடிகொழுக்கட்டை ஆகியவையும் நைவேத்யத்தில் இடம்பெறும். திருக்கார்த்திகை நாளில் பிரதான திருவிளக்கோடு இருபுறமும் துணை விளக்குகளை அவசியம் ஏற்றவேண்டும். வீட்டு வாசலிலும், வீட்டுக்குள்ளும் முக்கிய இடங்களில் தீபம் ஏற்ற வேண்டும். அப்போது, கைக்குழந்தைகளை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். சாம்பிராணி, பத்தி போன்ற தூபதீபங்களை முதலில் விநாயகருக்கும், பின் திருவிளக்கு ஜோதிக்கும் காட்டி, பின் மற்ற தெய்வப்படங்களுக்கு காட்ட வேண்டும்.
 
இன்று மாலை வீட்டில் திருவிளக்கு ஏற்றும் முன், விளக்கிற்கு சந்தனம் குங்குமம் இடவேண்டும். விளக்கின் எட்டு பாகத்தில் பொட்டு இட வேண்டும். அவை உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீபத்தின் பாதம் ஆகியவை. எட்டு இடங்களிலும் பொட்டிடும்போது, ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரை தியானித்துக் கொள்ள வேண்டும். இதனால், வீட்டில் செல்வம் பெருகும். எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியாவும் ஒரு காரணமும் சொல்வர். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய கண்கண்ட தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றன.
 
 
கார்த்திகை காலம் மட்டுமின்றி, விளக்கேற்றுவது எப்போதுமே நன்மை தரும். தினமும் காலை, மாலை இருவேளையும் விளக்கேற்ற உகந்த நேரங்களாகும். குறிப்பாக சூரியோதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை4.30- 6மணி) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலை 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் உகந்தவை. கல்வியில் உயர்வு, திருமணத்தடை நீங்க இந்த வேளையில் தீபமேற்றுவர். கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று வீடு முழுக்க விளக்கேற்றுவது பற்றி சம்பந்தரே பாடியிருக்கிறார். மயிலாப்பூரில் பூம்பாவை என்ற பெண் திடீரென மரணமடையவே, ஞானசம்பந்தர், அவள் மீண்டும் உயிர் பெறுவதற்காகப் பதிகம் பாடினார். அதில்,"விளக்கீடு காணாதே போதியே பூம்பாவாய்' என்று பாடுவதில் இருந்து இந்த விழாவின் மேன்மையை அறியலாம்.
 
இன்று நம் வீடுகளில் ஏற்றும் கார்த்திகை தீபம், இனி நடக்கப் போகும் நாட்களில் எல்லாம் சகல ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்கட்டும்.


Friday, 1 June 2012

வள்ளுவநெறி

பொய்யாமொழி  ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையானது என்று கணிக்கப்படுகிறது.  அக்காலத்தில் வெண்பாக்களால் ஆகிய முதல் நூலும், ஒரே நூலும் இதுதான். இதை எழுதிய திருவள்ளுவர் பிறந்த ஊர் `சென்னை மயிலாப்பூராகும்.

திருக்குறள் `உலகப் புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும்`. இது  இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க் கண்க்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் ஒன்றாகும்.

உத்தரவேதம் முதன் முதலில் அச்சுக்கு வந்த ஆண்டு 1812 ஆகும். இது முதன் முதலில் லத்தீன் மொழியில்தான் மொழிபெயர்க்கப்பட்டது.

                                                           
''செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
       அவியினும் வாழினும் என்`` (There is no use, if the persons who do not possess 'listening skills' Whether they live or die)

வாயுறைவாழ்த்து 133அதிகாரங்களும், 1330குறள்களும், 14000சொற்களும், 42192 எழுத்துக்களும் கொண்டது. ஆனால் ஓர் இடத்தில் கூட தழிழ் என்ற வார்த்தையை  திருவள்ளுவர் பயன்படுத்தவில்லை.

அறத்துப்பாலில் 38அதிகாரங்களும், பொருட்பாலில் 70அதிகாரங்களும், இன்பத்துப்பாலில் 25 அதிகாரங்களும் உள்ளன. குறிப்பறிதல் என்ற அதிகாரம் மட்டும் இருமுறை வந்துள்ளது.

அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் மூன்றாம் இடத்தை திருக்குறல் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  நரிக்குறவர் பேசும் `வக்ர போலி` என்ற மொழியிலும் கூட ஆகும்.

தெய்வநூலில், தமிழ் எழுத்துகள் 247இல் 37 எழுத்துக்கள் மட்டுமே இடம் பெறவில்லை. இதில் பயன்படுத்தப்படாத ஒரே  உயிர் எழுத்து `ஒள` என்பதாகும்.
                                                                      `வள்ளுவர்`
திருக்குறளில் இடம்பெற்றுள்ள  இரு மலர்கள் அனிச்சமலர், குவளை மலராகும்.  இரு மரங்கள் பனை, மூங்கிலாகும். இதில் இடம்பெற்றுள்ள ஒரே பழம், நெருஞ்சிப்பழம். ஒரே விதை குன்றிமணியாகும்.

திருக்குறள், உத்தரவேதம், பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, தெய்வநூல், பொதுமறை, முப்பால், தமிழ்மறை, திருவள்ளுவம் என வேறு பெயர்களாலும் போற்றப்படுகிறது.

Friday, 25 May 2012

வானம்பாடிகள்

அன்பான அம்மா இருந்தும் அது என்னவோ அவனுக்கு தனிமை எனும் உணர்வு...  காரணம் ஆண்மகனின் ஆசைகளைப்போல அவனுக்குள்ளும் ஒரு அடங்காத ஆசைகளின் எதிர்பார்ப்புகள்தான் அன்று அவனுக்குள்ளும்.

தாய் தருகின்ற அன்பான முத்தங்களும் தாயின் தோழமையும் அவளுக்கு வாழ்வில் வசந்தங்களாய் அவளை சுற்றிவர, அவளுக்குள்ளும் ஏதோ ஒரு தவிப்பும் தனிமையும் அவளை படர்ந்தன...

இவ்விரு இதயங்களும் சிறுவயதிலிருந்தே தன் குடும்ப சுமையை சுமந்துகொண்டு தங்களையும் வளர்த்துக்கொண்டனர்.
அவள் என்பவள் - அத்திகா
அவன் என்பவன் - க்ரிஷ்



அன்றொரு நாள் ரிங்.. ரிங் அத்திகாவின் மொபைல்போன்..
ஹலோ ஹலோ.. என்றாள்..
மறுமுனை ஹாய்.. ஹாய் சங்கீதம் மெல்ல மெல்ல அத்திகாவின் காதுகளில்...
அவ்ன்.. க்ரிஷ் பேசுகிறேன் என மெல்ல.. மென்மையான குரலில் சொல்ல,
அவளும் ஹாய்` க்ரிஷ்.. குட்மோர்னிங்.. என்றாள்,

இருவரும் இதுநாள்வரையில் ஒருவரை ஒருவர் சந்தித்தது கிடையாது.
நன்பர்களின் அறிமுகத்தால் உருவான நட்பே! இருவருக்குள்ளும், அதுவும்
இந்த மொபைலின் உதவியுடன்.

நன்பர்களான இருவரும் தனிமைகொள்ளும் நேரங்களில் தயக்கமின்றிய வார்த்தைகளால் மொபைலில் உலா வந்தனர். உலா விழா ஆனது..
`காதல் கனியத் தொடங்கியது.. கண்ணங்கள் சிவப்பதனை கண்கள் அறியாது காதலில் மிதக்க.. அவனும் அவளும் அன்புக்கு அடிமைகளாகினர்.

இந்த இரு அன்பின் அடிமைகளும்.. ஆசைகளுக்கு ஏங்க ஆரம்பித்தன. அவனும் அவளை` கண்டுகொள்ள ஆசைகொண்டான்.  அத்திகாவும் காத்திருந்த காலம் போதும்! உண்ணை கண்டுகொள்ள ஆவல்.. என்றாள்.

`மெய் மறந்த காதல் பொய்யாகலாம்`
 `பொய் மறந்த காதல் மெய்யாகுமே`
                                                                                                                                                                                                              `அக்கரைச்சீமையில் நீ இருந்தும்..   இவன்
 மனசு அடிக்கடி துடிக்குதடி`

`க்ரிஷ்`  தாகத்துடன் தனது ட்ரவலிங் பேஃக்கினை எடுத்துக்கொண்டு.. 

Friday, 23 March 2012

நீந்தீ....

நீந்தீ


  நாம் பார்த்து பொறாமைப்படும் இனங்களில் பறவை இனம்தான் முதலில் இருக்கும். சுத‌ந்‌திர‌த்‌தி‌ற்கு பெயர்போன பறவை இன‌ங்க‌ளை‌ப் ப‌ற்‌றிய ‌சில தகவ‌ல்‌களை இ‌ங்கே காணலா‌ம்.





வளைய‌த்தை மா‌ட்டி‌வி‌ட்டு, அத‌ன் மூல‌ம் பறவை‌யின‌‌ங்க‌ளி‌ன்
 வா‌ழ்‌விய‌ல் முறை, நடமா‌ட்ட‌ம், ஆயுள்காலபொதுவாக பறவைக‌ள் ப‌ற்‌றிய ஆரா‌ய்‌ச்‌சி‌யி‌ல், பறவைக‌ளி‌ன் கா‌ல்க‌ளி‌ல் ‌சிறு வங்கள் ஆகியனவற்றை ஆய்வாளர்கள் உலகிற்கு அறியத்தருகின்றனர்.


இ‌னி பறவைகளை‌ப் ப‌ற்‌றி பா‌ர்‌ப்போ‌ம்...

1 ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மித்ரா என்ற பறவை ஒன்பது நிறத்தில் தெரியும்.

கடல் புறாக்கள் நீரில் மிதந்து கொண்டே தூங்கும்.

பச்சோந்தியின் கண்கள் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும்.

மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 தடவைகள் கொத்தும்.

குவாரின் என்ற பறவை மல்லாந்து தூங்கும்.

புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ. வரை பறக்கும் திறன் படைத்தது.

 ராஜஸ்தான் பறவைகள் சரணாலயத்தில் 374 பறவை இனங்கள் இருக்கின்றன.

நீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை புறா.

ஒரே சமயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை இடும் பறவை நெருப்புக் கோழி.

 மிகப் பெரிய நீர்ப்பறவை அன்னம்.

 வெட்டுக் கிளியை வேட்டையாடும் பறவை மைனா.

வான்கோழிகள் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை.

 நியூசிலாந்து நாட்டில் காக்கைகள் கிடையாது.

பறவைக‌‌ளி‌ன் மன தை‌ரிய‌த்தை கு‌றி‌ப்‌பிட‌ம் ‌திரை‌ப்பட பாட‌ல் ஒ‌ன்று உ‌ள்ளது.
 `` ச‌த்த‌ம் போடாதே`` எ‌ன்ற ‌திரை‌ப்பட‌த்‌தி‌ல் வரு‌ம் பாட‌லி‌ன் ஒரு ‌சில வ‌ரிக‌ள்.



``கட‌ல் தா‌ண்டு‌ம் பறவை‌க்கெ‌ல்லா‌ம் ,  இளை‌ப்பாற மர‌ங்க‌ள் இ‌ல்லை....

கல‌ங்காமலே க‌ண்ட‌ம் தா‌ண்டுமே.. இதை ‌நினை‌த்து‌த்தா‌ன் நா‌ம் நம‌க்கு. வரு‌ம் சோதனைகளை  சாதனைகளாக மா‌ற்‌றி‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.....
 
                                                                        நன்றி