Wednesday, 15 September 2010

இலங்கையில் ஒரு இராமேஸ்வரம்

இலங்கையில் இந்துசமுத்திர கரையோரத்தின் மேற்கு திசையில் அழகான வரலாற்று பொழிவுடன் அமைந்திருக்கிறது இந்த..  உடப்பு என்று அழைக்கப்படும் `உடைப்பு` கிராமம்.
வாணம் பொழிவது.. நல்ல விடயம்தான். ஆனால் இந்த கிராமத்தை சுற்றி அமைந்திருக்கும் ஏனைய ஊர்களுக்கு மழை பெய்தாலே! ஆபத்தாக இருந்திருக்கிறது.
இதனால் கடலோரமாக இருக்கும் உடப்பு` கிராமத்தின் வழியாக அன்றிலிருந்து இன்றுவரை வெள்ளத்தினை கடலுக்கு சேர்ப்பதனால் `உடைப்பு` என உருவெடுத்து,  ’உடைப்பங்கரை’  என்றும் தற்பொழுது `உடப்பு` எனவும்,  இலங்கை அரச மொழியினால் `உடப்புவ` எனவும் அழைக்கப்படுகிறது.

உடப்பு 2012இல் பிரதேச சபையாக மாற்றமடையும் என்பது இக்கிராம வாழ் மக்களின் கருத்து ஆகும். இக்கிராமத்தில் அமைந்திருக்கும் ஆலயங்களின் ஆசீர்வாதம் பெற்றும்.. கடலின் காதல் கொண்ட காற்றலை சத்தத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
இதேவேளை சிங்களத்தின் புறக்கனிப்பினால் இராணுவ தொந்தரவுகளுடன் அராசாங்க போக்குவரத்து வசதிகள் இல்லாமலும் வாழ்கிறார்கள்.

உடப்பு மற்றும் ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயங்கள் புத்தள மாவட்டத்தின் கீழ் அமையப்பெற்றவை.  இவ்விரு பாடசாலைகளின் மொத்த மாணவர்கள்தொகை கிட்டத்தட்ட 3700. இந்த இரு பாடசாலைகளும் அந்த மாவட்டத்தின் விளையாட்டுப்போட்டிகளிலும் என்றுமே முன்னிலைதான். இந்த பாடசாலைகளின் பழைய மாணவர்கள் நாட்டின் சூழ்நிலையாலும் வேலைவாய்ப்பு புறக்கனிப்பினாலும் பாதுகாப்பின்றிய காரணங்களினாலும் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

(வீரபத்திரகாளி அம்மன் கோவில் சுவரின் வரலாற்று சித்திரம்.)
ஆலய திருவிழா முதல் கல்யாணம், கலாசாரம்,பேச்சுத்தமிழ் அனைத்தும் இராமேஸ்வரத்தின் அச்சுக்கலவை என்றே கூறலாம். காரணம் அவர்கள் இராமேஸ்வரத்தின் வேர்கள்.



இராமேஸ்வரத்திலிருந்து  18மீனவ குடும்பங்கள் 7தோனியில்(மீன்பிடிபடகு) 1630 இல் அதாவது 16ஆம் நூற்றண்டில் கடல்வழியாக இலங்கைக்கு வந்துள்ளார்கள்.  அன்றிலிருந்து இன்றுவரை உடப்பு கிராமத்தின் பாரம்பரிய தொழில் மீன் பிடிப்பு. அதிக முதலீடாக இறால் வளர்ப்பு முறையும் இவர்களால் கையாளப்படுகிறது.  தற்போது இம்மக்களின் சனத்தொகை 16000வரை வளர்ந்துள்ளது.

மேலும் சிறப்பானதொரு விஷயம்  இராமேசுவரத்தின் ’சிவன்கோவிலுக்கும்  உடப்பின் ‘ஸ்ரீ ருக்மனி சத்யபாம சமேத ஸ்ரீ பார்த்தசாரதி, திரெளபதை அம்மன் தேவஸ்தானத்துக்கும் உறவு உள்ளது.
(18நாள் ஆடிதிருவிழாவின் தீமிதிப்பு)

(பாடசாலை மாணவிகள்)

 கொழும்பிலிருந்து 150கிலோமீட்டர் தூரமும் புத்தளமாவட்டம் மற்றும் சிலாப நகரசபைக்குள் இருப்பதும், தென்னந்தோப்புக்களும், இந்துசமுத்திர கடற்கரையும்  மற்றொருபுறம்  ஒல்லாந்தர்(டச்சுக்காரர்) வெட்டிய வாய்க்காலும் இந்த கிராமத்தின் அடையாளங்கள். 

’நாம் தமிழர்’ இயக்க சீமான் அவர்கள் இந்த கிராமத்தின்  பாசத்துக்குரியவரும் ஆவார்.

நாட்டியம் நாடகம் சினிமாவரைக்கும் இவர்கள் தமிழ்நாட்டுக்காரர்களாகவே  வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.


ஈழத்தமிழன் உணர்வுகளையும் இந்திய தமிழ்    வார்த்தைகளையும் இவர்கள் சுமந்து வாழ்கின்றனர்.

மகாபாரத கதை(ஆடிமாதம்) 18நாட்கள் திருவிழாவாக இந்தகிராமத்தில் கொண்டாடப்படுகிறது.

  


சித்திரையில் முளக்கொட்டுதல்(முளப்பாரி வளர்த்தல்) திருவிழா உடப்பு பெண்களால் மிகவும் ஆடம்பரமாகவும் நேர்த்தியாகவும் கொண்டாடப்படுகிறது.

இப்படி அறிந்த பல சிறப்புக்களையும் அறியாத இன்னும் பல சிறப்புகளையும் கொண்டு நூறுசதவீத தமிழ் கலாச்சார கிராமமாக, தமிழ்நாட்டைப்போல விளங்குகிறது இலங்கையின் உடப்பு கிராமம்.


















மேற்கண்ட படத்தில் இருக்கும் பேராசிரியர் `திரு.வ.சிவலோகதாசன்` என்பவர்தான் முதன் முதலில் 1997-ஆம் ஆண்டு உடப்பு-வின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் குறித்தும் புத்தகம் வெளியிட்டார்.

     நன்றி!.....