Thursday, 21 October 2010

நம்பிக்கை

குளிர்காற்று வீசுகின்ற தருணம், கருமேகங்கள் ஒன்றோடு ஒன்று உரையாடிக்கொள்ள மழை கொட்டும்வேளையில்  `சாவித்திரி வீட்டு டெலிபோன் அவசரமாக அழைத்தது.  `ஆட்டோ பாபு  பேசுகிறேன். நான் உங்க வீட்டு வாசலில் நிக்கிறேன், உங்க கணவர் அனுப்பினார்’ என்றான் பாபு. காரணம் அவளின்  கார் பழுதடைந்திருந்ததால்  அன்று அவள் ஆட்டோவுக்காக காத்திருந்தாள். ஓடி வந்து ஆட்டோவில் ஏறினாள் அந்த இளவயது பெண்குட்டி..

``கர்ப்பிணிப்பெண்களுக்கு இலவசம்`` என்ற வாசகத்தை உற்று நோக்கிய சாவித்திரி.    ’உன்னோட மனைவி இந்த ஆட்டோவில் ஏறியிருக்கிறாளா?’ என்றாள். உடனே பாபுவும், ‘ஆம் தினமும் ஒரு ரவுண்டு வருவா என்றான்.

சாவித்திரி:   ‘இதுவரை எத்தனை கர்ப்பிணிப்பெண்களை இலவசமாக பிரசவத்திற்கு அழைத்துப் போயிருக்கிறாய்?’

பாபு:   ‘இருபது பேராவது இருக்கும்’

உனக்கு எத்தன பசங்க என்று சாவித்திரி பாபுவிடம் கேற்க..  இன்னும் போராடுகிறோம் என்றான் பாபு.

அந்த பிரசவ ஆஸ்பத்திரியின் முன் ஆட்டோவை நிருத்தச் சொல்லி தன் விசிட்டிங் கார்டை அவனிடம் கொடுத்தாள்.

“நீ செய்றது பெரிய தொண்டு. உன் மனைவியின் நம்பிக்கை வீண் போகாமலிருக்க, நீயும் அவளும் ஆஸ்பத்திரியில் என்னை வந்து பாருங்க. உங்கள் மடியில் ஒரு குழந்தையைத் தவழச் செய்வது எனது பொறுப்பு”

என்றாள் பிரபல குழந்தை பிறப்பு நிபுணரான டாக்டர் சாவித்திரி.

Monday, 11 October 2010

கல்வியா?செல்வமா?வீரமா?

வீரம்,செல்வம்,கல்வி இவைகளில் எது முக்கியம்? எது பெரிது? இதுதான் நவராத்திரியின் ஆரம்பம். 


ஆனால் இந்த நூற்றாண்டில் இவைகள் மூன்றும் யாரிடம் அதிகமாக இருக்கிறதோ! அவர்கள் வெற்றியாளர்களாகிறார்கள்.  இந்த வெற்றி, தனிமனிதன் முதல் உலக நாடுகள் வரை நாம் அறிந்தது.

மனிதன் என்பவன் மட்டும் அறிவுடயவனல்ல என்பது யாவறும் அறிந்த விடயம். காரணம்  உதாரணமாக நாம் விலங்குகளைவிட ஒரு அறிவு அதிகம் கொண்டதனால் ஆறறிவு கொண்ட மனிதனாகிறோம். இந்த அறிவின் வளர்ச்சிதான் கல்வி என்பதும் எமக்கு புரியும். இதனால்தான் நானும் இந்த கட்டுரையினை எழுதுகிறேன். ஆகவே கல்விதான் பெரியதா?  இல்ல தற்போதய உலகில் செல்வம் வேண்டுமா?

பூமியில் பிறக்கும் ஒவ்வொருவரின் அவசியங்கள் அவர்களின் குடும்ப பொருளாதாரம்தான் முடிவு செய்கிறது. தற்போதய உலகில் உண்ண உணவு முதல் அவர்களின் கல்வி வரைக்கும் செல்வம் அவசியம்.

வீரம் கொண்ட கடவுள் `தைரியலட்சுமி` ஆகவே தைரியம் கொண்ட சக்தியைத்தான் நவராத்திரியில் முதலாக வணங்குகிறோம். காரணம். தைரியம் என்பது மனிதனின் உடல் ஆரோக்கியம் முதல் உலக போர்வரையும் பொருந்தும். மனிதனின் உடல் ஆரோக்கியம் பிறவியின் ஆரம்பம் முதல் உருவானது. ஆனால் தற்போதய உலகில் தைரியம் வளர்க்க `செல்வம்` வேண்டும்.

ஆதிகாலம் முதல் தற்போதய உலகம்வரை போராட்டங்களும் வீரதீர செயல்களும் நாடுகளுக்கிடையேயான அசுரதீர செயலின் பாதிப்புகளும்,  ஈழத்தின் தற்போது நடந்த மனித பேரழிவுகளும் உண்டாக காரணம் என்ன?
செல்வம் தேடும் போட்டிதான். 

அறிவு பிறவியிலானது அதன் வளர்ச்சி கல்வியாகும்.
தைரியத்தின் ஆரோக்கியம் வீரம்.
அறிவு-செல்வம்-கல்வி,   தைரியம்-செல்வம்-வீரம் ஆனால்

வீரம்-செல்வம்-கல்வி  இதுதான் உண்மை. செல்வமே நடுநிலைமையான அவசியம்.